கொரோனா காரணமாக பள்ளிகள் விடுமுறை விட்டுள்ள நிலையில் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றிய தொகுப்பு
21 நாட்கள் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்வது என தெரியாமல் வீட்டிலேயே சுற்றி வந்து கொண்டிருப்பார்கள். 21 நாட்கள் எந்த செயலை செய்தாலும் அது நடைமுறைக்கு பழக்கப்பட்டுவிடும் என்பது பலரும் அறிந்த ஒன்று. அதன்படி இந்த விடுமுறை நாட்களில் எதனை பழக்கப்படுத்திக் கொள்ள போகிறோம் என்பதே முக்கியமான விஷயம்.
குழந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பான பயிற்சிகளை கற்றுக் கொடுப்பது நல்லது.
கற்பது மட்டும் முக்கியம் அன்று அதனை பழக்கத்தில் வைத்திருப்பதும் மிகவும் அவசியமான ஒன்று.
வீட்டில் தோட்டம் அமைக்க கற்றுக் கொடுக்கலாம் இதற்கு பக்குவமும் பொறுமையும் அவசியம் இந்த இரண்டையும் எளிதாக கற்க உதவி புரியலாம்.
செடிகளை வளர்க்க உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். இது உணவின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும்.
ஓவியக்கலை ஒரு சிறந்த கலை புதுமையாக சிந்திப்பதற்கு புதிதாய் படைப்பதற்கு ஓவிய பயிற்சியே சிறந்த பயிற்சியாகும்.
எளிய முறையில் செய்யக்கூடிய அடுப்பை பயன்படுத்தாமல் செய்யும் உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது சிறந்தது.