Categories
தேசிய செய்திகள்

ட்ரெயின் எங்க இருக்கு… எப்ப வரும்… எல்லா தகவலையும் தெரிஞ்சுக்க… புதிய வாட்ஸ் அப் சேவை..!!

ரயில் மூலம் பயணம் செய்பவர்களே, இனி தங்களுக்கான பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் மற்றும் ரயில் குறித்தான பிற தகவல்களை வாட்ஸ்அப் மூலமே அறிய முடியும்.

இந்தியாவில் நீண்டகாலமாகக் காத்திருப்போர் பட்டியல் சிக்கலைத் தீர்க்கும் இந்தியாவின் முதல் WL & RAC இயங்குதளமான ரெயிலோஃபி (Railofy) இன்று ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிகழ்நேர பிஎன்ஆர் நிலை மற்றும் ரயில் பயணத் தகவல்களை ரயில் பயணிகளின் வாட்ஸ்அப் எண்ணிற்கே நேரடியாக பகிர்ந்து கொள்ளும் படி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சம் பயனரின் 10 இலக்க பிஎன்ஆர் எண்ணை ஒரு முறை மட்டும் +919881193322 என்ற வாட்ஸ்அப் எண்ணுடன் பகிர்ந்து கொண்டால் போதுமானது. உங்கள் பயணசீட்டின் PNR எண் நிலையை நொடியில் இனி தெரிந்துகொள்ளலாம். இந்த சேவையின் மூலம், பயணிகள் தங்கள் வாட்ஸ்அப் எண்ணில் பி.என்.ஆர் நிலையின் அப்டேட்களைப் உடனடியாக பெறுவார்கள்.

இந்த அம்சம் பயனர் ரயிலில் ஏறுவதற்கு முன்பு ரயில் தாமதமான  தகவல்களையும் வழங்குகிறது, எனவே பயணிகள் ரயில் நிலையத்தை எப்போது அடைய வேண்டும் என்று தெரிந்துகொள்வார்கள். ரயிலுக்குள் இருக்கும்போது, ​​அடுத்த வரவிருக்கும் நிலையம் குறித்த தகவலையும் இந்த அம்சம் பயணிகளுக்கு தெரிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இனி பயணிகளுக்கு தேவைப்படும் தகவல்கள் வாட்ஸ்அப் மூலம் நொடியில் கிடைக்கும்.

Categories

Tech |