சென்னை உயர்நீதிமன்றத்தில் மருவிய பாலினத்தவர் மற்றும் LGBTQIA PLUS போன்ற சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊடகங்களில் இந்த பிரிவினரை குறிப்பது தொடர்பான சொல் அகராதியை தயாரிப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு மருவிய பாலினத்தவர் மற்று ம் LGBTQIA PLUS சமூகத்தினர் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1,11,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
அதன் பிறகு இந்த சமுதாயத்திற்கான விதிகள் வகுக்கப்பட்டு கருத்துகள் கோரப்பட்ட நிலையில், கருத்துகள் எதுவும் வராததால் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டு ஒரு மாதத்திற்குள் மசோதா நிறைவேற்றப்படும் என்று அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் கூறினார். அதோடு LGBTQIA PLUS கொள்கைகள் இன்னும் 3 மாத காலத்திற்குள் இறுதிசெய்யப்படும் எனவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் இதைக் கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.