ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலையில் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டது.விரைவு ரெயில் தடம்புரண்டதில் சுமார் 25 பேர் காயமடைந்தனர்.
ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலையில் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டது. கட்டாக் மாவட்டம் சாலாகோன்-நெற்குந்தி ரெயில் நிலையங்களுக்கு இடையே, சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது.
இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் 5 பெட்டிகள் தடம்புரண்டது.இந்த விபத்தில் சுமார் 25 பயணிகள் காயமடைந்தனர். பின்னர் காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்பொழுது அங்கு நிலவிவரும் கடுமையான பனிமூட்டம் காரணமாக, முன்னால் சென்ற சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இருப்பினும் விபத்துக்கு பனிமூட்டம் தான் காரணம் என்பது உறுதி செய்யப்படவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தப்படுகிறது.