Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK வுடன் இணைந்துகொண்டு ADMK வை அழிக்கப்பார்க்கும் துரோகி.. OPS ஐ வெளுத்து வாங்கிய EPS

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி கே.பழனிச்சாமி, தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒழிந்து விடும்,  அழிந்து விடும் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒழிந்து விட்டது,  அழிந்துவிட்டது என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.வேண்டுமென்றே திட்டமிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உடைக்க முயற்சித்தனர்.  சில துரோகிகள் நம்முடைய வெற்றிக்கு குந்தகம் ஏற்ப்படுத்தி விட்டார்கள். அதனால் நாம் ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.

யார் துரோகி என்பதை கழக நிர்வாகிகளும்,  தொண்டர்களும் தெரிந்து கொண்டார்கள்.அப்படிப்பட்ட துரோகிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கைகோர்த்துக்கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த நினைக்கின்றார்கள், உடைக்க நினைக்கின்றார்கள். எங்களுடைய தொண்டர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும் , முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு எங்களை உடைக்க விடலாம் என்று ஒருபோதும் எண்ணி விடாதீர்கள்.

வேடிக்கையாக இருக்கிறது. சூதாட்டத்திற்கு யாராவது கருத்து கேட்பார்களா ? இந்தியாவிலேயே சூதாட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு கருத்து கேட்கின்ற ஒரே முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் தான் என எடப்பாடி பழனிசாமி தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் விமர்சித்தார்.

Categories

Tech |