Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கந்த சஷ்டி கவசம் அவதூறு” நாட்டை காட்டி கொடுக்கும் துரோகிகள்…. அமைச்சர் ஆவேசம்….!!

ஒரு இனத்தையோ அல்லது மதத்தையோ குறை கூறி அவதூறு பரப்புவோர் நாட்டை காட்டிக் கொடுக்கும் துரோகிகள் என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செல்லிப்பட்டு கிராமத்தில் புதிய தடுப்பணை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சம்பத் என்பவருடன் சிவி சண்முகம் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கந்தர் சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்புவதாக சமீபத்தில் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரில் சமந்தபட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் சமூகவிரோதிகள் தான்.

அவர்கள் ஒரு இனத்தையோ, மதத்தையோ மட்டும்தான் குறைகூறி, அவதூறு பரப்புகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி செய்வது ஒரு நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு சமம் தான். எனவே அவர்கள் நாட்டை காட்டி கொடுக்கும் துரோகிகள். ஆகவே அவர்கள் மீது தமிழக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |