அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்பின் மகளுக்கு நேற்று திருமணம் நடந்திருக்கிறது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பின் முன்னாள் மனைவியான மார்லா மேப்பில்சின் மகள் டிப்பனி டிரம்ப்பிற்கும் அவரின் காதலரான மைக்கேல் பவுஸோவிற்கும் நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் கடற்கரையில் திருமணம் நடந்திருக்கிறது.
மகளின் திருமணத்தில் டிரம்ப் தன் மனைவி மெலானியா டிரம்ப் உடன் பங்கேற்றார். டிப்பனி, லண்டனில் தான் தன் காதலரை முதல் தடவையாக சந்தித்திருக்கிறார். அவரின் காதலரான மைக்கேல் பவுஸோ, லெபனான் நாட்டின் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். கடந்த ஜனவரி மாதத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.