Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டிரான்ஸ்பார்மரில் எரிந்த தீ… துண்டிக்கப்பட்ட மின் விநியோகம்… தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

டிரான்ஸ்பார்மரில் எரிந்த தீயை மின்வாரிய அதிகாரிகளும், தீயணைப்பு படையினரும் அணைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த கம்பத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்து விட்டது. இச்சம்பவம் குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மேலும் அதிகாரிகள் இணைந்து விரைவில் தீயை அணைத்ததால் டிரான்ஸ்பார்மரில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதன் பின் அந்த டிரான்ஸ்பார்மர் மூலம் மீண்டும் மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டிரான்ஸ்பார்மை சுற்றி கிடந்த குப்பையில் தீப்பற்றி, அந்த தீயானது டிரான்ஸ்பார்மரிலும் பரவியிருக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என கூறியுள்ளனர்.

Categories

Tech |