டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரத்தை நிறுத்தினர். இந்நிலையில் உரிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றதால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.