உருமாறிய கொரோனாவை தற்போதைய கொரோனா தடுப்பு மருந்து கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் வுகாண் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரசானது தற்போது உலகம் முழுவதும் பரவி மிக மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான உயிர்களும் பறிபோயுள்ளன. கொரோனாவிற்கான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்த பிறகும் புதிய வகை கொரோனா ஒன்று அதிவேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் முதலில் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் மூலமாக தற்போது பல நாடுகளிலும் பரவியுள்ளது.
இதனால் பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை, அனைத்து நாடுகளும் தடை செய்தன. மேலும் பிரிட்டன் அரசின் புதிய உருமாறிய வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமுடக்கத்தை அறிவித்தது. இந்நிலையில் புதிதாக பயன்பாட்டுக்கு வந்த பைசர் தடுப்பூசி உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த ஆய்வு முடிவுகள் முதற்கட்டமாக கிடைத்த தகவல் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவுகள் என்னவென்று தெரியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.