புது வகை கொரோனா இந்தியாவில் வேகமாக பரவும் ஆபத்து உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனஅவ்விலிருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில், பிரிட்டனிலிருந்து பரவிய உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகின்றது. இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவிற்கு ஆபத்து ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் இந்த வீரியமிக்க கொரோனா வைரஸை தடுக்காவிட்டால் பெரிய ஆபத்து ஏற்படும் என்றும், புதிய கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் இந்த எச்சரிக்கையை மனதில் கொண்டு மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து புதிய வகையான தொற்று பொதுமக்களிடையே பரவாமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே கொரோனா வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது இந்த புதிய வகை கொரோனா பரவினால் நிலைமை இன்னும் மோசமாகி விடும்.