Categories
உலக செய்திகள்

சிக்கிய சீன விஞ்சானி…. கைது செய்த அமெரிக்கா…. மிரளும் சீனா …!!

அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் எப்.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் அமெரிக்க நாட்டின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் குவான் லீ என்பவர் தனது வீட்டு அருகே உள்ள குப்பைத் தொட்டியில் சேதமடைந்த டிரைவை எறிந்ததற்காக அமெரிக்க நாட்டின் எப்.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு மிக முக்கியமான தொழில் நுட்பமென்பொருள் அல்லது அமெரிக்க தரவை மாற்றி அமைப்பதற்காக குவான் லீயிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அவரது விசா விண்ணப்ப நேர்காணலின்போது சீன ராணுவத்துடன் அவர் வைத்திருந்த தொடர்பை மறைத்துள்ளார். குவான் லீ நேற்று நீதிமன்றத்தின் முன் அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டார்.

Categories

Tech |