Categories
உலக செய்திகள்

இந்த நாடுகளுக்கு மட்டும் அனுமதி..! தடையை நீக்கிய சவுதி அரேபியா… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சவுதி அரேபியா கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்திருந்த நிலையில் 11 நாடுகளுக்கு மட்டும் தற்போது தடையை நீக்கியுள்ளது.

சீன நாட்டில் தோன்றிய கொரோனா தொற்று உலகையே ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக உலுக்கி வருகிறது. இந்தியா தென் ஆபிரிக்கா, பிரேசில், பிரித்தானியா என ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா மாறுபாடு ஒவ்வொரு விதமாக உருவானதால் சர்வதேச பயணிகளுக்கு உலக நாடுகள் தடை விதிக்க வேண்டிய நிலை உருவானது. அந்த வரிசையில் வெளிநாட்டு பயணிகள் நாட்டிற்குள் நுழைய சவுதி அரேபியாவும் தடை விதித்திருந்தது. இந்நிலையில் சவுதி அரசாங்கம் 11 நாடுகளுக்கு மட்டும் தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது.

அதேசமயம் தனிமைப்படுத்துதல் நடைமுறைகள் கட்டாயம் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை முதல் ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம், பிரித்தானியா, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, சுவீடன், ஜப்பான், பிரான்ஸ், அயர்லாந்து, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மட்டும் சவுதிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என்று அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |