உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் வசித்து வரும் ஷாமன் என்ற பெண்ணுக்கு 9 மாத கைக்குழந்தை ஒன்று இருந்தது. இந்த பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் விபின் என்பவருடன் திருமணத்தை தாண்டிய முறைதவறிய உறவு இருந்துள்ளது. இந்த உறவு காரணமாக இருவரும் தனிமையில் சந்தித்து ஊர்சுற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அப்பெண் தனது கைக்குழந்தையை ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்று விட்டார். தங்களின் உறவுக்கு இடையூராக இருப்பதாக கருதியும், ஊர்சுற்ற அதிக பணம் தேவை என்பதாலும் இந்த கொடூர முடிவை ஷாமன் எடுத்துள்ளார்.
இதுகுறித்து பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஃபரிதாபாத் பகுதியில் குழந்தையை மீட்டனர். மேலும் அப்பெண்ணையும், அவரின் ஆண்நண்பரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.