Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாசல் படியில் பயணம்….. துண்டான தலை….. கோவை தொழிலாளி மரணம்…. தூத்துக்குடியில் சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் ரயில் வாசல் படியில்  பயணம் மேற்கொண்ட வாலிபர் தவறி விழுந்து தலை துண்டாகி இறந்த  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் ஆரம்பிக்கும் இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்றின் தலை துண்டாக கிடந்துள்ளது. இதனை நெல்லை to  ஈரோடு வரை செல்லும் பாசஞ்சர் ரயில் ஓட்டுனர் பார்த்து ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தூத்துக்குடி தலைமை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த தூத்துக்குடி காவல் அதிகாரிகள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அவரது கையில் இருந்த பையை பரிசோதித்த போது அதில் வாக்காளர் அடையாள அட்டை ரயில் டிக்கெட் பஸ் டிக்கெட் உள்ளிட்டவை வைத்திருந்தது தெரியவந்தது. அதை வைத்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவர் பெயர் சுதாகர் என்பதையும் கோயம்புத்தூரில் மீன் விற்பனை  தொழில் செய்து வருகிறார் என்பதையும் கண்டறிந்தனர்.

மேலும் வேலையை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல கோயம்புத்தூரில் இருந்து மதுரை வரை பேருந்தில் வந்த சுதாகர் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து நெல்லைக்கு செல்லும் ரயிலில் ஏறி பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் பொதுப் பெட்டியில் அவர் ஏறி பயணம் மேற்கொள்கையில் அதிக கூட்டம் காரணமாக வாசலிலேயே பயணம் மேற்கொண்டுள்ளார் சுதாகர்.

இதையடுத்து கடம்பூர் ரயில் நிலையத்தில் எப்போதும் எக்ஸ்பிரஸ் ரயிலும் நிற்காது. அப்போது கடம்பூர் ரயில் நிலையம் அருகில் தண்டவாளங்கள் சேரும் பகுதி வரும் போது ரயில் அதிகமாக குலுங்கியதால் வெளியில் வீசப்பட்ட சுதாகர் ரயில் சக்கரத்தில் சிக்கி அவரது தலை துண்டிக்கப்பட்டது காவல்துறையினர் மேற்கொண்ட  விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. 

Categories

Tech |