தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று சேலம் மாவட்டடம் தாரமங்கலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து திமுக மு.க ஸ்டாலின் தொண்டர்களிடம் பேசினார்முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றியோடு அமைய வேண்டுமென்று வாழ்த்துக்கள். எதற்காக வெளிநாட்டிற்கு செல்கின்றார். முதலீடா திரட்டுவதற்காக இல்லை அவர்களின் முதலீட்டை பெருக்குவதற்காகவா?சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முனைப்போடு செயல்படுகின்றது.
அதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதன்முதலாக திமுக சார்பில் நாங்கள் தானே குரல் கொடுத்தோம். பாராளுமன்றத்தில், நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள் என்று உருக்காலை பகுதி மக்கள் சொன்னார்கள்.இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் தேசிய வளர்ச்சி கூட்டம் என்று இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா முதலமைச்சரையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தியபோது ஒவ்வொரு மாநிலத்தின் கோரிக்கைகளும் அங்கு நடந்த அஜந்தாவில் இடம்பெற்றது.
தமிழகத்தின் சேலம் உருக்கு ஆலை கோரிக்கை இடம்பெறாததால் நான் பங்கேற்க மாட்டேன் என்று வெளிநடப்பு செய்தார் கலைஞர்.பின்னர் பிரதமர் இந்திரா காந்தி கருணாநிதியை தொலைபேசியில் தொடர்புகொண்டு தமிழக அஜெண்டாவை சேர்த்து சேலம் உருக்காலைக்கு அடிக்கல் நாட்டினார் இந்திரா காந்தி. இது வரலாறு .எதற்காக என்று சொல்கிறேன் என்றால் இன்றைக்கு அந்த அணைக்கு ஆபத்து வந்திருக்கிறது. அதை தடுத்து நிறுத்த ஒரு கண்டன அறிக்கை , தீர்மானம் என எதையாவது முதல்வர் செய்திருக்கணும்.
உடனடியாக அமைச்சர்களை அனுப்பி இருக்கணும். இல்ல அவரே நேரடியாக சென்று அந்த பிரச்சனையை சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரிடம் பேசி , போராடி அதை தடுத்து நிறுத்துகின்ற முயற்சிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். இந்த லட்சணத்தில் வெளிநாட்டிற்கு சென்று முதலமைச்சர் நிதி திரட்டும் பணியில் ஈடுபடுகின்றார் வெட்கக்கேடு வெட்கக்கேடு என்று கடுமையாக முக.ஸ்டாலின் சாடினார்.