Categories
தேசிய செய்திகள்

டிக் டாக் வீடியோ பதிவுடன் பயணம்… விபத்தில் முடிந்த அவலம்…

ஒடிசா மாநிலத்தில் இளைஞர்கள் டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து கொண்டே இரு சக்கர வாகனம் ஓட்டியதால் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

சிவசங்கர் சாகித் என்பவர் தனது மைத்துனருடன் ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்பொழுது டிக் டாக்கில் வீடியோ எடுத்தபடியே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அச்சமயம் எதிர்பாராத நேரத்தில் அவர்களது வாகனத்தின் மீது டிரக் ஒன்று திடீரென மோதியதில் விபத்து ஏற்பட்டது.

படுகாயமடைந்த அவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிவசங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மைத்துனர் சுபப் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |