தமிழகத்தில் விரிவுரையாளர் தேர்வில் தமிழை தகுதி தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதனால் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும் தேர்வில் 20 மதிப்பெண்கள் பெற வேண்டும். அதே சமயம் இந்த தேர்ச்சி முறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய பல்வேறு தேர்வுகளில் நுழைவதை கட்டுப்படுத்தும் விதத்தில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பகுதி ஆ பிரிவில், 150 மதிப்பெண்ணில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக எஸ்.சி. பிரிவினருக்கு 68 மதிப்பெண்ணும், எஸ்.டி. பிரிவினர் 60 மதிப்பெண்ணும், மற்ற பிரிவினருக்கு 75 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.