ஆசிரியர் தகுதி தேர்வை பிஎட், டிடிஎட்(D.Ted) இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது இணையதளம் மூலமாக பெறப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13-ஆம் தேதி அதாவது நாளை கடைசி நாள் ஆகும். இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுவதற்கு B.Ed, D.Ted இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் தகுதியானவர்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்ற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories