“மக்களே ஜனநாயகத்தின் உயிர்நாடி”, ஆகயால் மக்களை கண்ணியமாக நடத்துங்கள் என அதிகாரிகளுக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவுரை வழங்கினார்.
ஒடிசாவில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் அமைச்சர்கள், கலெக்டர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட 2 நாள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி நவீன் பட்நாயக்,“மக்களே ஜனநாயகத்தின் உயிர்நாடி. காவல் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், அலுவலகங்கள் அனைத்துமே அவர்களுக்காகத்தான் செயல்படுகிறது.
இங்கு வேலை செய்பவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள்தான் ஊதியம் கொடுக்கிறார்கள். எனவே மக்களே உண்மையான எஜமான். அவர்கள் உங்களை நாடி வரும்போது கண்ணியமாக நடத்துங்கள்.அவர்களின் பிரச்சினைகளை நேர்மையான முறையில் அணுகுங்கள்” என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
நம் அனைவருக்கும் குடும்பம் இருக்கிறது. அந்த குடும்பத்தின் 4.5 கோடி மக்கள் இருக்கிறார்கள். அதில் நம் பிள்ளைகளுக்கு உயர்கல்வி, நம் சகோதர, சகோதரிகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு மற்றும் நம் பெற்றோர்களுக்கு உயர்தரமான மருத்துவ வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தி கொடுப்போம் என்ற முதல்வர் நவீன் பட்நாயக் உருக்கமாக பேசினார்.