சேலம் மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாநகர பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனையை அதிகரிக்கும் வகையில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளது. அந்த மையத்தை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.