Categories
உலக செய்திகள்

அமெரிக்கா கொடுத்த சிகிச்சை…. கொரோனாவில் இருந்து மீண்ட இந்தியர்கள் …!!!

அமெரிக்காவில் புதிதாக கையாண்டு வரும் பிளாஸ்மா சிகிச்சையால் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மூவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருகின்றனர்

அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்கவாழ் இந்தியர் மூவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களது உடலில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதோடு அவர்கள் குணம் அடைவதற்கான அறிகுறிகளும் தெரிவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசி தயார் செய்ய சிறிது காலம் தேவைப்படுகிறது. ஆனால் அதற்குள்ளாக கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் மருத்துவர் ஒருவர் கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரை செய்துள்ளார்.

இந்த சிகிச்சை பயனுள்ளதாக இருக்குமா என்பது தெரியாத நிலையிலும் மருத்துவர்கள் பழைய நுட்பத்தை அடிப்படையாக வைத்து புதிதாக சிகிச்சை முறையை கொடுத்து வருகின்றனர். பிளாஸ்மா சிகிச்சையானது கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மாவை தனியாக எடுத்து தொற்றினால் அதிகளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுவது.

தடுப்பூசி இல்லாத இந்த நிலையில் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் சுறுசுறுப்பான பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரை செய்கின்றனர். இதனை அடுத்து அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்ட மூன்று இந்தியர்களுக்கு இந்த பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மற்றும் அவர்கள் நலமுடன் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இவ்வகை சிகிச்சைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து குணமடைந்தவரின் பிளாஸ்மாவை தானம் செய்ய முடியும். அவ்வாறு தானம் செய்யும் பொழுது இருவரும் ஒரே பிரிவு இரத்த வகையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். மருத்துவத்துறையில் தடுப்பூசி உருவாவதற்கு முன்னர் தொற்றுநோய்களை பிளாஸ்மா சிகிச்சை பயன்படுத்தியே எதிர்த்துள்ளனர் எனவே இது முதல்முறை அல்ல.

Categories

Tech |