பலத்த மழையின் காரணமாக சாய்ந்து விழுந்த ராட்சத மரத்தை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்ததால் ஊட்டியில் இருக்கும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் இருக்கும் ராட்சத மரம் சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் விழுந்த ராட்சத மரத்தை வெட்டி அகற்றியுள்ளனர். அதன் பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது.