Categories
சினிமா தமிழ் சினிமா

மரம் நட்டு ‘மங்களம்’ எனப் பெயர் சூட்டு…. விவேக்கின் நினைவாக நகுல் செய்த செயல்…. வைரலாகும் வீடியோ….!!!

நடிகர் நகுல் விவேக்கின் நினைவாக மரம் ஒன்றை நட்டு அதற்கு மங்களம் எனப் பெயர் சூட்டி உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று உயிரிழந்தார்.இதை தொடர்ந்து இவரது உடல் நேற்று மாலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இவரது மறைவிற்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் விவேக் மரம் நடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்ததால் அவரின் நினைவாக பலர் மரங்களை நட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் நகுல் மரம் ஒன்றை நட்டு உள்ளார். மேலும் அவர் நட்ட மரத்திற்கு ‘மங்களம்’ என்றும் பெயர் சூட்டியுள்ளார்.

நடிகர் விவேக் மற்றும் நகுல் இணைந்து நடித்த ‘பாய்ஸ்’ படத்தில் விவேக்கின் பெயர் மங்களம். அதனால் அவரை நினைவு கூறும் வகையில் நகுல் நட்ட மாமரத்திற்கு மங்களம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் மரம் நடும் வீடியோவையும் நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த செயல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

https://www.instagram.com/p/CNxD8q8lxjn/?igshid=tx9oxqtx2o13

Categories

Tech |