புதுக்கோட்டை மாவட்டத்தில் மரங்கள் மீது ஆணி அடிப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சாலையோரமாக ஏராளமான மரங்கள் இருந்தது. அந்த மரங்களில் பாதி கஜா புயலின் போது சாய்ந்ததில் மீதமிருந்த மரங்கள் நன்றாக வளர்ந்துள்ளது.
இந்நிலையில் அந்த மரங்கள் மீது சிலர் விளம்பர பதாகை வைப்பதற்காக ஆணி அடித்துள்ளனர். அதனால் அந்த மரங்கள் பட்டுப் போகும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளதால் அந்த மரங்களை காப்பாற்ற இனி மரங்கள் மீது ஆணி அடிப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.