அரியலூர் அருகே சாலையோர மரங்களில் நிறம் பூசும் பணிகள் நடைபெற்றன.
அரியலூர் மாவட்டம் திருமானூர் தாலுகாவுக்கு உட்பட்ட சாலை ஓரங்களில் பனை மரம், புளிய மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. அப்பகுதி வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அப்பகுதியில் உள்ள மரங்களின் மீது அவ்வப்போது மோதி சிறு சிறு காயங்களுடன் தப்பி விடுகின்றனர்.
தற்போது முற்றிலுமாக இதுபோன்ற விபத்துக்களை தடுக்க அரசுப் பொறியாளர் ராமச்சந்திரன் என்பவரது தலைமையில் சாலையோரங்களில் உள்ள மரங்களில் கருப்பு வெள்ளை நிறம் பூசுவதற்கான பணிகள் நடைபெற்றது. அதேபோல் சாலையோரங்களில் உள்ள முட்செடிகளை அகற்றுதல், சாலை மையத்தில் கோடு போடுதல், ஒளியை எதிரொலிக்கும் நிரப்பட்டைகளை ஓட்டுதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.