சாலையோரம் அபாயகரமாக நிற்கும் மரங்களை வெட்டி அகற்றி விட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தஞ்சோரா பகுதியின் சாலையோரத்தில் ஏராளமான அபாயகரமான மரங்கள் இருக்கின்றன. இந்த மரங்கள் சாலையில் முறிந்து விழுவதால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வருவாய் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பந்தலூர் தாசில்தார் குப்புராஜ், கூடலூர் ஆர்.டி.ஓ சரவணன் போன்றோர் அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற உத்தரவிட்டுள்ளனர். அதன் படி வனத்துறையினர் அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.