பிரபல ஹாலிவுட் நடிகை எமிலி ரதஜ்கோவ்ஸ்கி “my body”என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஒவ்வொரு முறை யார் என்னை பற்றி பேசினாலும் அது என் உடலை பற்றியதாக மட்டும் தான் இருக்கிறது. என்னிடம் என் உடலைத் தவிர வேறு ஒன்றுமே இல்லையா? என்ற கேள்வி எழுப்பியுள்ளார் எமிலி. நான் ஒரு பெண்ணாக என்னை உணர்கிறேன் என்ற புத்தகம் தான் மை பாடி என்று தெரிவித்துள்ள அவர்,இதனை ஆண்கள் நிச்சயம் படிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
29 வயதாகும் ஹாட் மாடலான எமிலி ரதஜ்கவுஸ்கி, தனது ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் எம்ராடா என்ற பெயரிலேயே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தி வருகிறார். 26.6 மில்லியன் ரசிகர்கள் உலகளவில் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். பாலிவுட் நடிகைகள் அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் இவரது தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.