கூகுள் ப்ளே ஸ்டோரில் பிரபலமாக டவுன்லோட் செய்யப்பட்டு வந்த சப்வே சர்ப்ரைஸ் கேமின் உண்மை பின்னணி தெரிய வந்துள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் அதிக எண்ணிக்கையில் டவுன்லோட்களை பெற்ற கேம்களில் ஒன்றான சப்வே சர்பர்ஸ் கதைக்களம் உண்மையில் நடந்த நிகழ்ச்சியை வைத்து உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது. ரயில்வே தண்டவாளத்தில் ஸ்கேட்டிங் செய்த சிறுவன் இறந்ததை அடுத்து, அச்சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த கேம் உருவாக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. சப்வே சர்பர்ஸ் கேமினை உருவாக்கியவருடைய மகன் உண்மையில் ரயில்வே தண்டவாளத்தில் ஸ்கேட்டிங் செய்து இறந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சப்வே சர்பர்ஸ் கேமினுடைய கதைக்களமானது விளையாடுவோர் தண்டவாளத்தில் ஸ்கேட்டிங் செய்து மாட்டிக் கொண்ட பிறகு போலீசிடம் இருந்து தப்பித்து ஓடுவது போல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு தப்பித்து ஓடும் போது கடக்கும் தூரத்திற்கு ஏற்றவாறு தங்கம் மற்றும் இதர பொருட்களை நம்மால் சேகரிக்க முடியும். இந்தநிலையில் வைரலான தகவலை ஆய்வு செய்து பார்த்த போது, இந்த தகவலை முதலில் பதிவிட்டு அதன் பின் நிராகரிக்கப்பட்ட ட்விட் இப்போது காண கிடைத்துள்ளது. ஜூலை 29ம் தேதி இந்தவகை ட்வீட் அழிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் ஜூலை 30ம் தேதி உறுதி செய்யப்படாத தகவலை கொடுத்ததற்கு இந்த பயனர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த வகை கேமினை சேர்ந்து உருவாக்கிய எஸ்வைபிஒ கேம்ஸ், சப்வே சர்பர்ஸ் தெரு கலாச்சாரம் மற்றும் அதன் தனித்தன்மையை வெளிக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்டதாக தெரிவித்து உள்ளது. மேலும் வைரலாகும் தகவலில் உள்ளது போல இந்த கேம் உண்மையாகவே ரயில்வே தண்டவாளத்தில் ஸ்கேட்டிங் செய்து உயிரிழந்த சிறுவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உருவாக்கப்படவில்லை என உறுதியாக்கபட்டு விட்டது. இதன் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்படுவது என்னவென்றால், போலி செய்திகளை பரப்ப வேண்டாம். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, சில சமயங்களில் போலி செய்தி பாதிப்பு விளைவாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.