Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள்… அதிர்ச்சியடைந்த பெற்றோர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

ஏற்கனவே திருமணமானவர் ஆதிவாசி கிராமத்தில் வசிக்கும் இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகிலிருக்கும் ஆதிவாசி கிராமத்தில் 19 வயது இளம்பெண் வசித்து வருகின்றார். இந்நிலையில் திடீரென இந்த இளம்பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் உடனடியாக அவரது பெற்றோர் இளம்பெண்ணை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதித்து பார்த்த போது அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அந்த இளம்பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகாததால் உடனடியாக மருத்துவர்கள் கோத்தகிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் இந்த இளம்பெண்ணிற்க்கும், கெங்கரை பகுதியில் வசிக்கும் கார் டிரைவரான சோமசுந்தரம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் சோமசுந்தரத்திற்கு திருமணமாகி ஏற்கனவே மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதனையடுத்து சோமசுந்தரம் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து இளம் பெண்ணுடன் நெருக்கமாக பழகி அவரை கர்ப்பமாக்கியtது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சோமசுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |