Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகனின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி… குடும்பமே செய்த காரியம்… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மகன் இறந்த துக்கத்தில் குடும்பமே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகில் உள்ள ஐந்துமெத்தை பகுதியில் சீனிவாசன்(38) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி நித்யா. இந்நிலையில் இவர்களுக்கு யசோதா மற்றும் பரத்வாஜ் என 2 பிள்ளைகள் இருந்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஆண்டு பரத்வாஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மகனை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதனையடுத்து சீனிவாசன், நித்யா, யசோதா ஆகியோர் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று நினைக்கும் அளவிற்கு மிகுந்த வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.

இதனைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு பரத்வாஜின் முதல் ஆண்டு நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சீனிவாசன் சம்பவத்தன்று அவரது மனைவி நித்யா மற்றும் மகள் யசோதாவிற்கு விஷம் கொடுத்துவிட்டு அவரும் விஷம் குதித்துள்ளார். இந்நிலையில் உயிருக்கு போராடிய இவர்களை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் 3 பேரையும் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சீனிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நித்யா மற்றும் யசோதாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இதுகுறித்து தகவலறிந்து வந்த பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்த சோகத்தில் குடும்பமே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |