Categories
உலக செய்திகள்

சுவிஸில் காணாமல் போன ஜெர்மானிய இளம்பெண்… தகவல் தெரிவிப்போருக்கு சன்மானம்… காவல்துறையினர் முக்கிய அறிவிப்பு..!!

ஜெர்மானிய இளம்பெண் ஒருவர் சுவிட்சர்லாந்தில் மாயமானது தொடர்பில் தகவல் தெரிவிப்பவருக்கு காவல்துறையினர் சன்மானம் அறிவித்துள்ளனர்.

கடந்த 1996-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள Kreuzlingen என்ற பகுதியில் வசித்து வந்த Heidi Scheuerle (26) எனும் ஆய்வாளரை திடீரென காணவில்லை. மேலும் Heidi Scheuerle சம்பவத்தன்று Weil am Rhein என்ற பகுதிக்கு செல்வதற்காக புறப்பட்டுள்ளார். இதையடுத்து சுதந்திரமாகவும் புதுமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வாகனமாக ஏறி சென்றுள்ளார். அதனை தொடர்ந்து Heidi Scheuerle-ஐ Winterthur அருகாமையில் உள்ள Forrenberg என்ற பகுதிக்கு சுவிஸ் விமான சேவை ஊழியர் ஒருவர் தனது வாகனத்தில் அழைத்து சென்று சேர்த்துள்ளார்.

அதன்பிறகு அந்த ஆய்வாளர் வேறு ஒரு வாகனத்தில் சென்றதாக அந்த சுவிஸ் விமான சேவை ஊழியர் கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு Heidi Scheuerle-ஐ காணவில்லை. இந்நிலையில் Heidi Scheuerle மாயமானதாக அக்டோபர் 10-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 300-க்கும் மேற்பட்டவர்களிடம் துர்காவ் மாநில காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் Heidi Scheuerle குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி நான்கு வருடங்களுக்கு பிறகு ஒரு காட்டில் மனித மண்டையோடு ஒன்றை காளான் எடுப்பவர் கண்டுபிடித்துள்ளார்.

அதன் பிறகு டி.என்.ஏ சோதனையில் கடந்த 2002-ஆம் ஆண்டு அந்த மண்டையோடு காணாமல் போன ஜெர்மானியருடையது என்பது தெரிய வந்துள்ளது. அதனை துருப்பு சீட்டாக கொண்டு காவல்துறையினர் Heidi Scheuerle கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று விசாரணையில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை அந்த கொலையின் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது குறித்த தகவல் எதுவும் தெளிவாக தெரியவில்லை. இந்த நிலையில் துர்காவ் காவல்துறையினர் Heidi Scheuerle காணாமல் போனது தொடர்பில் தகவல் தெரிவிப்பவருக்கு 50,000 பிராங்குகள் சன்மானமாக அறிவித்துள்ளனர்.

Categories

Tech |