திருச்சி மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச் சாவடி எண் 60_இல் உள்ள இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது.
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச் சாவடி எண் 60-ல், வாக்குப்பதிவு கட்டுப்பாட்டுக் கருவி பழுதடைந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இயந்திர கோளாறின் காரணமாக தடைபட்டுள்ளது. ஏற்கனவே ஈரோடு , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில வாக்குச்சாவடி மையங்களிலும் கோளாறு ஏற்பட்டுளள்து.