Categories
தேசிய செய்திகள்

திருமணம் ஆகாமல் ஒரே வீட்டில் குடும்பம்… சந்தேகப்பட்ட காதலன்… காதலியின் கையை பிளேடால் அறுத்த கொடூரம்…!!

காதலியின் மீது சந்தேகப்பட்ட காதலன், காதலியின் கையை பிளேடால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் அந்தேரி லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ் பகுதியில் சாகிர் கான் என்பவர் வசித்து வருகிறார். இவரும் வணிக வளாகத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி உள்ளனர். இந்நிலையில் தாஹிர் கானுக்கு தனது காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது காதலியை சாகிர் கான் பின் தொடர்ந்து சென்ற போது, வேறு ஒரு ஆணுடன் நின்று அந்தப்பெண் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.

இதனால் கோபமடைந்த சாகிர் கான் தனது காதலியை பிடித்து அவரது கையை பிளேடால் அறுத்துவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிவிட்டார். இதனையடுத்து அலறி துடித்த அந்தப் பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனையில் அந்த பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் சாகிர் கான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |