காஸ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு ஆதரவும் இல்லை,எதிர்ப்பும் இல்லை என்று கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நீக்க கோரிய மசோதா நேற்று மாநிலங்களவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டதையடுத்து இன்று மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றும் இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த எம்பிக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் காஷ்மீர் விவகாரத்தில் வெளிநடப்பு செய்ததோடு காஷ்மீர் 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை என்ற கருத்தையும் தெரிவித்துள்ளனர்.