தமிழகத்தின் பிரதான கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தங்கள் ஆதரவாளர்களுடன் நேரடியாகவே மோதிக் கொள்வதால் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வந்தார். ஆனால் தற்போது டெல்லி உச்சநீதிமன்றம் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்துள்ளதால் இபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இவர் தற்போது அமித்ஷாவை எதற்காக சந்தித்தார் என்ற உண்மை காரணம் வெளிவந்ததாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அமித்ஷாவை சந்தித்து விட்டு எடப்பாடி பழனிச்சாமி வெளியே வரும்போது அவருடைய முகத்தில் கவலை மட்டுமே தெரிந்தது. இதிலிருந்து டெல்லி மேலிடம் ஓபிஎஸ்-க்கு ஆதரவு கொடுப்பது தெரிகிறது. அதாவது கர்நாடக மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறது. இதனால் மேல் இடத்திற்கு ஒப்பந்ததாரர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்த ஒப்பந்ததாரர்களை எல்லாம் ஒருங்கிணைத்து செயல்படுவது ராமலிங்கம் அண்ட் கோ என்ற பெயரில் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் சந்திரகாந்த் ராமலிங்கம் என்று பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சந்திரகாந்த் ராமலிங்கம் என்பவர் இபிஎஸ் இன் சம்மந்தி வழி உறவினர் ஆவார். அதோடு இபிஎஸ் மகன் மிதுனுக்கு சந்திரகாந்த் சகலை முறையாம். இதனால் கிட்டத்தட்ட நெருங்கிய உறவினர்களாகவே இருக்கின்றனர். அதோடு தொழில் ரீதியாகவும் மிதுனம் சந்திரகாந்தும் மிகவும் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பற்றி பேசுவதற்காக தான் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக கூறப்படுகிறது.
அதாவது குற்றங்கள் தொடர்பான முழு ஆதாரத்தையும் லோக் ஆயுக்தா காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணை பெங்களூரு முதல் சேலம் வரை விரிவடைந்துள்ளது. இதனால் தன்னுடைய மகனுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இபிஎஸ் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக அரசியல் வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமியிடம் சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தை அழைத்து வாருங்கள் அதற்கு பிறகு பிரச்சனைகளை பற்றி பேசிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால்தான் ஓபிஎஸ் அமித்ஷாவை சந்தித்து விட்டு வரும்போது மிகவும் கவலையோடு இருந்தாராம்.