Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

திரிஷாவின் திரை வாழ்க்கையின் தொடக்கம்

தமிழ் திரையுலகில் தனது நடிப்பு திறமையால் பலரது மனதில் கனவு கன்னியாக நிலைபெற்றவர் திரிஷா. திரைத்துறையில் கால் பதிப்பதற்கு முன்பாக முதலில் மாடலிங் துறையில் கோல் ஊன்றினார் த்ரிஷா. 1999இல் மிஸ் சேலம் பட்டத்தையும் மிஸ் சென்னை பட்டத்தை வென்றார். 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று மிஸ் ப்யூடிஃபுள் ஸ்மைல் பட்டத்தையும் வென்றார். திரிஷா ஹார்லிக்ஸ், விவேல் சோப்பு, உதயம் பருப்பு என பல விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு திரிஷாவின் முகம் தமிழக மக்களிடம் பரிச்சயமான முகம் ஆக மாறியது.

இதனையெடுத்து எடுத்து அவருக்கு தமிழ் திரையுலகில் இருந்து வாய்ப்புகள் வரத் தொடங்கின. இப்படித்தான் அவரது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். திரிஷா முதலில் கதாநாயகியாக நடித்த படம் லேசா லேசா ஆனால் அந்த திரைப்படம் வெளிவர காலதாமதம் எடுத்த நிலையில் திரிஷா இரண்டாவதாக நடித்த மௌனம் பேசியதே திரைப்படம் திரைக்கு வந்தது எனவே அப்படமே அவரது அறிமுக படமாக மாறியது.

Categories

Tech |