Categories
சினிமா தமிழ் சினிமா

திரிஷா பெயர் மாற்றிக்கொண்டார்…? இணையத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி…. அவரே சொன்ன விளக்கம்…!!!

முன்னணி நடிகை திரிஷா தனது பெயரை மாற்றி கொண்டார் என பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் உருவான ‘பரமபதம் விளையாட்டு’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இத்திரைப்படத்தின் டைட்டில் கார்டில் திரிஷாவின் பெயர் ‘த்ர்ஷா’ என்று போடப்பட்டிருந்தது. இதனை கண்ட பலரும் திரிஷா பெயர் மாற்றம் செய்து கொண்டால் என பேசி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை திரிஷா இதுகுறித்து கூறியதாவது, “நான் பெயர் மாற்றம் எதுவும் செய்யவில்லை. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை. திரிஷா என்ற அழகான பெயர் இருக்கும்போது நான் ஏன் பெயரை மாற்றம் செய்ய வேண்டும். என் ரசிகர்கள் வதந்திகளை நம்ப மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |