ஆடுகளம் திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆடுகளம். சேவல் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமின்றி 6 பிரிவுகளின் கீழ் தேசிய விருதையும் வென்றது.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்திருந்தார். இப்படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால் இப்படத்தில் டாப்ஸி நடிப்பதற்கு முன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை திரிஷா நடித்து இருந்ததாக தெரியவந்துள்ளது. அதன்படி ஆடுகளம் திரைப்படத்தில் முதலில் திரிஷா தான் நடித்திருக்கிறார்.
அதன்பிறகு கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து விலகியதால், பின் டாப்ஸி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் தனுஷ் மற்றும் திரிஷா இணைந்து நடித்த, ஆடுகளம் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.