நடிகை திரிஷா சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார் .
பிரபல நடிகை திரிஷா தற்போது யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் யுனிசெப் அமைப்பின் சார்பில் “குழந்தைகள் உரிமைகள்” தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம் என்றும்,
இணையதள குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்போம் என்று கூறினார். மேலும், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் , 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையில் போக்சோ சட்டத்தின் கீழ் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் , 2014-ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிராக 9 ஆயிரமாக இருந்த பாலியல் வழக்குகள் 2016-ல் 36 ஆயிரமாக அதிகரித்துவிட்டது. இதுகுறித்து இளைஞர்கள் பேசவும், செயல்படவும் முன்வர வேண்டும் என்றும் திரைப்படங்களை சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது என்றும் அவை வெறும் கற்பனை அதை பின்பற்ற கூடாது என மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார் .