Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சீன மொழியில் ‘திரிஷ்யம்2’…. அதிரடி மாற்றங்கள் காத்திருப்பு….!!!

சீன மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ள திரிஷ்யம் 2 படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத் திரையுலகில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் உருவான இத்திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து இத்திரைப்படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் உருவாக்கி வெளியிட்டனர்.

மேலும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் உருவாகியுள்ளது. குறிப்பாக சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட திரிஷ்யம் படத்தில் அந்நாட்டு அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப கிளைமாக்ஸ் காட்சியில் நாயகன் சரண் அடைவது போன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் செய்யப்பட்ட இந்த மாற்றத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து சமீபத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் திரிஷ்யம் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் இத்திரைப்படத்தையும் சீன மொழியில் ரீமேக் செய்ய உள்ளனர். முதல் பாகத்தில் செய்தது போலவே இரண்டாம் பாகத்திலும் சில மாற்றங்கள் செய்ய உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |