Categories
உலக செய்திகள்

“திருமணத்திற்கு எதிராக கருத்து கூறிவிட்டு எதற்கு திருமணம்?”.. மலாலாவை விமர்சிக்கும் இணையவாசிகள்..!!

உலக அளவில் புகழ்பெற்ற மலாலாவிற்கு பிரிட்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திருமணம் நடைபெற்ற நிலையில் அவர் திருமணம் தொடர்பில் சர்ச்சையான கருத்து தெரிவித்ததற்கு இணையவாசிகள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

பாகிஸ்தான் நாட்டில் மலாலா யூசப்பை, பெண் கல்விக்காக போராடியவர். அதன்பின்பு தலிபான்களின் தீவிரவாதத்தை எதிர்த்து களமிறங்கினார். இதில் கோபமடைந்த தலிபான் தீவிரவாதிகள், கடந்த 2012ம் வருடத்தில் அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் மலாலா தலையில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்ட பின்பு உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு, அவர் குடும்பத்தினரோடு பிரிட்டனில் குடியேறினார். அதன் பின்பு, கடந்த 2014ம் வருடத்தில், அவருக்கு 17 வயதாக இருந்தபோது, அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார். இதன் மூலம் மிகச் சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற சாதனையை பெற்றிருந்தார்.

அதனைத்தொடர்ந்து, லண்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் கடந்த வருடம் பட்டம் பெற்றார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பர்மிங்காம் வீட்டில், மலாலாவிற்கும்  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினுடைய மூத்த அதிகாரி அசர் மாலிக்கிற்கும் திருமணம் நடைபெற்றது.

அவர் சில மாதங்களுக்கு முன் திருமணம் குறித்து ஒரு கருத்து தெரிவித்திருத்திருந்தார். அதில், ஏன் திருமணம் செய்கிறார்கள்? என்று புரியவில்லை, திருமணம் செய்யாமல் தம்பதியாக இருவர்  வாழ முடியாதா? நம் வாழ்வில் ஆண் துணை வேண்டுமெனில், அதற்காக திருமண காகிதத்தில் கையெழுத்திட வேண்டிய தேவை இல்லை என்று கூறியிருந்தார்.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான கருத்தை தெரிவித்து விட்டு, மலாலா திருமணம் செய்ததை இணையவாசிகள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Categories

Tech |