Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் எப்போது வெளியேறும்..? வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்..!!

வெள்ளை மாளிகை, ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகளை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியேற்றுவதாக தெரிவித்திருக்கிறது. 

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் அரச படையினருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. எனவே அந்நாட்டின் அரச படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா, நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இறக்கப்பட்டது. சுமார் இருபது வருடங்களாக தொடர்ந்த இந்த மோதலில் தலீபான் தீவிரவாதிகளின் தாக்குதலால் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

எனவே போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அமைதி ஒப்பந்தத்தின் போது, தலீபான் தீவிரவாதிகள், அமெரிக்கா மற்றும் பிற படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

எனவே அமெரிக்கா, 2021 ஆம் வருடம் மார்ச் மாத இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது படைகள் முழுவதும் வெளியேற்றப்படும் என்று உறுதியளித்தது. இந்நிலையில் தற்போது வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரான, ஜென் சாகி, ஆகஸ்ட் மாத கடைசியில் அமெரிக்கா தங்கள் படைகள் அனைத்தையும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றும் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |