திருச்சியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினரின் புகைப்படத்தை வைத்து சமூக வலைதளங்களில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக ஆர்.ஜே ஆனந்த் என்பவர் இருந்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததாலும், அதற்கு தேவையான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு நிதி உதவி செய்யுமாறும் அவரே கேட்பதுபோல் சித்தரிக்கப்பட்டு சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
இந்த செய்தி குறித்து தன்னுடைய வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ள ஆர்ஜே ஆனந்த், தன்னுடைய உடல் நிலை சரியாக உள்ளதாகவும், தான் யாரிடமும் எதற்காகவும் பண உதவி கேட்டு எந்த தகவலையும் பதிவிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே இப்படி பொய்யான தகவல்களை பரப்பும் மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாக கைது செய் வேண்டும் என வலியுறுத்தி அவரது சார்பில் காவல் துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.