Categories
மாநில செய்திகள்

JEE தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்…. எம்.பி சு. வெங்கடேசன் மத்திய மந்திரிக்கு அவசர கடிதம்….!!!!

இந்தியாவில் மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தில் தற்போது தமிழக மாணவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் கட்டாயமாக 10-ம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் கடந்த வருடம் தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டதால் அவர்களுடைய மதிப்பெண்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதனால் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை மாணவர்களால் விண்ணப்பத்தில் பதிய முடியாது. இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஷ் கூறியிருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மத்திய மந்திரி தர்மேந்திரா பிரதானுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை கட்டாயமாக பதிவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலின் போது தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டதால் மதிப்பெண் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு கூடிய விரைவில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று எழுதியுள்ளார். மேலும் எம்.பி சு. வெங்கடேசன் தான் மத்திய மந்திரி தர்மேந்திரா பிரதானை நேரில் சந்தித்து இது குறித்து பேசியுள்ள நிலையில் அவர் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்ததாக கூறியுள்ளார்.

Categories

Tech |