கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உங்கள் திறமைக்கேற்ற பாராட்டு கிடைப்பதில் கொஞ்சம் சந்தேகம்தான். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிகளை செய்து வீணாக்கி செல்வீர்கள். அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அது போலவே அக்கம்பக்கத்தார் உடன் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். வாகனங்களில் நிதானமாக சென்றால் விபத்துக்களை தவிர்க்கலாம். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது சிறப்பு. கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகச் சிறப்பு. பிள்ளைகளுக்காக அலைய வேண்டியிருக்கும். குடும்பங்களுக்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.
மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பணத்தேவை இன்றைக்கு இருக்கும். கடன்கள் மட்டும் தயவு செய்து வாங்காதீர்கள். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடையோ அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள் இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி பெறவும் நாளாக இருக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் சூரிய நமஸ்காரத்தை மேற்கொண்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் கருநீல நிறம்