Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலையில் நிலை தடுமாறிய லாரி… ஓட்டுநருக்கு நடந்த கோர சம்பவம்… ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையில் சென்று கொண்டிருந்த  லாரி விபத்து ஏற்பட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தின் வழியாக சேலத்திற்கு ஹைதராபாத்திலிருந்து இரும்பு பைப் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரியை குரோமிகோ என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். அதன் பின் அவருடன் மாற்று ஓட்டுனராக சூசைராஜ் மற்றும் பூபதிராஜ் போன்றோர் உடன் வந்துள்ளனர். இந்நிலையில் கணவாயின் அருகில் வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் செயல்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் ஓட்டுனர்கள் குரோமிகோ உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைவாக சென்று 3 பேரையும் கைப்பற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குரோமிகோ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |