Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோதமான செயல்…. பறிமுதல் செய்யப்பட்ட லாரி…. போலீஸ் நடவடிக்கை….!!

மணல் கடத்திய லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் குண்டாறு பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது உரிய உரிமம் இல்லாமல் மணல் கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து லாரியை நிறுத்திவிட்டு மணல் கடத்திய 3 நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்ததோடு, தப்பியோடிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |