அமெரிக்காவில் நடந்த வன்முறைக்கு ட்ரம்ப் தான் காரணம் என்று அமெரிக்க தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
வட அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சித் தலைவர் அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். இந்நிலையில் வரும் 20ஆம் தேதி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பைடன் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி சென்ற அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் இந்த கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.
இதில் 4 பேர் பலியாகியுள்ளனர். இந்த வன்முறைக்கு அமெரிக்க தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இதற்கு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒபாமா, “இந்த சம்பவம் நம்மை கேலிகொள்வதற்கு சமம். மேலும் இந்த வன்முறையை தூண்டிவிட்டதற்கு பின்னல் இருப்பது ட்ரம்ப் தான் என்று ஒபாமா கூறியுள்ளார். ஆனால் இந்த உண்மையை குடியரசு கட்சி ஆதரவாளர்களும், ஊடகங்களும் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.