Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: மண்ணை கவ்வினார் ட்ரம்ப் – வெளியான அறிவிப்பு …!!

கடந்த 4 நாட்களாக உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது அமெரிக்க அதிபர் தேர்தல். உலகமே உற்று நோக்கி இந்த தேர்தலில் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக அவரே வருவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்துள்ளார்.

இறுதியாக தற்போது வெளியான பென்சில்வேனியா மாகாண முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடன் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன் 49.7 சதவீத வாக்குகளும், ட்ரம்ப்  49.2 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அங்குள்ள 20 தேர்தல் சபை வாக்குகளும் ஜோ பைடனுக்கு சென்றன. இதனால் அவரின் மொத்த வாக்கு 284ஆக அதிகரித்துள்ளது. அதிபர் வேட்பாளராக 270 தேர்தல் சபை வாக்குகள் தேவை என்ற நிலையில் ஜோ பைடன் கூடுதலாக 20 வாக்குகள் பெற்றுள்ளார். தற்போதைய நிலையில் ஜோ பைடன் ட்ரம்ப் வெறும் 214 தேர்தல் சபை வாக்குகள் மட்டுமே பெற்று உள்ளார். ஜோ பைடன் தொடர்ந்து ஜார்ஜியா, நெய்வேடா  ஆகிய இரண்டு மாகாணங்களிலும் முன்னிலையில் இருந்தது வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |